Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வீட்டை விட்டு விரட்டிய மகன்கள் காவல் நிலையத்தில் முதியவர் தீக்குளிப்பு

திருவொற்றியூர், ஆக.8: திருவொற்றியூரில் வீட்டை விட்டு விரட்டிய மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் நிலையத்தில் முதியவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை புது தெருவை சேர்ந்தவர் குமார் (எ) மிஷின்குமார் (66). இவருக்கு உஷா, பாரதி, மாரி என்ற 3 மனைவிகளும், 5 பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று மதியம் குமார் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்து எஸ்ஐயிடம், தனது பிள்ளைகள் சோறு போட மறுத்து, வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும், கடந்த 3 மாதங்களாக புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகரில் உள்ள தங்கை வீட்டில் வசித்து வருவதாகவும், தனது மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் புகார் தெரிவித்தார். மேலும், இயற்கை உபாதை கழிக்க வேண்டும், என்று போலீசாரிடம் தெரிவித்தார். அப்போது கழிப்பறை பின்னால் இருப்பதாக கூறினர்.

வெளியே வந்த குமார், காவல் நிலைய நுழைவாயிலில், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த போலீசார், அதிர்ச்சியடைந்து குமாரின் உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் பலத்த காயமடைந்த முதியவரை மீட்ட போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், முதியவரின் குடும்பத்தினரிடம் விசாரிக்கின்றனர்.