Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஸ்டவ் பற்ற வைத்தபோது உடலில் தீப்பிடித்து பெண் கருகி சாவு

பெரம்பூர், ஜூன் 8: சென்னை வெற்றி நகர் நாகம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (61). இவர் தனது மகன் சந்தோஷுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் சுந்தர்ராஜ். தனது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதால் மகளுடன் குரோம்பேட்டையில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் வீட்டிலிருந்த ராஜலட்சுமி மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்த போது அடுப்பில் திடீரென தீப்பற்றியுள்ளது. ராஜலட்சுமியின் புடவையில் தீப்பட்டு மளமளவென எரிந்துள்ளது.

இதை பார்த்து பக்கத்து அறையில் இருந்த அவரது மகன் சந்தோஷ் ஓடிவந்து தாயின் மீது பிடித்து எரிந்த தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பிறகு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராஜலட்சுமி 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.