Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாநகர பேருந்து பெயர் பலகையில் ‘தக்காளி வெற்றி கழகம்’ வாசகம்: வீடியோ வைரல்

துரைப்பாக்கம், ஆக.7: துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் ராஜிவ்காந்தி சாலையில், மாநகர பேருந்து ஒன்றின் வழிதட பலகையில் ‘தக்காளி வெற்றி கழகம்’ என பெயர் வாசகம் இருந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஒட்டி ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

அந்த வீடியோ வைரலான நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரியிடம் விளக்கம் கேட்டது. அவர் கூறுகையில், பேருந்தின் வழித்தட விவர பலகை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இவ்வாறு மாற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழித்தட விவர பலகை சரி செய்யப்பட்டது. மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,’ என கூறினர்.