Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்த பெண் புரோக்கர் கைது

பூந்தமல்லி, ஆக.7: மதுரவாயலில் பகுதியில் பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் கைது செய்யபட்டார். அவரிடம் இருந்து ஒரு பெண்ணை போலீசார் மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சென்னை பெருநகர காவல், விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு மதுரவாயல் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதுரவாயல் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை மதுரவாயல் போலீசார் கண்காணித்தனர். அப்போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெண் போலீசாருடன் அந்த வீட்டுக்குள் மதுரவாயல் போலீசார் சென்று அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த வர்ஷா (49) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.‌ மேலும் அந்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த ஒரு பெண்ணை போலீசார் மீட்டனர்.

போலீசாரின் விசாரணையில் வர்ஷா ஆலப்பாக்கம் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. போலீசாரின் விசாரணைக்குப் பின்னர் நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.