Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

15 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 33 ஆண்டு சிறை

சென்னை, ஜன.6: விழுப்புரம் மாவட்டம், வளவதூர், குமார குமாரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(26). இவர், கடந்த 2022ம் ஆண்டு சென்னை அண்ணாநகர், திருமங்கலத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அப்பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார், அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, சக்திவேலுக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பளித்தார்.