Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் மட்டும் ஒரு கோடி பேர் பயணம்: நிர்வாகம் தகவல்

சென்னை, அக்.2: செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஒரு கோடி பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத்தன்மையான பாதுகாப்பான வசதியை சென்னை மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.

அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1,00,26,601 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக 11.9.2026 அன்று 3,93,580 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு, வாட்ஸ்அப், போன்பே, பேடிஎம் மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டண தள்ளுபடியை வழங்கப்படுகிறது, என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.