Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

பல்லாவரம், அக். 2: பம்மல், எல்.ஐ.சி. காலனி, 4வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் ஷாகுல் ஹமீது (42) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் வெளியே சென்றிருந்தனர். சிறிது நேரத்தில் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டு கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதை பார்த்த மற்ற குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். பின்னர் தீ விபத்து குறித்து தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள், வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.