சென்னை, அக்.2: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னையில் நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அப்போது வீரபாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய ஜனநாயகத்தின் உயிரை ஒன்றிய அரசு நெரித்துள்ளது.
சதிகளின் மூலம் சுமார் 13 கோடி மக்களின் வாக்களிக்கும் உரிமையைத் தடை செய்து படுகொலை புரிந்துள்ள நிலைக்கு தார்மீக மற்றும் நேரடி பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் சமத்துவத்தின் அடித்தளத்தையே நாட்டின் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாம் கழுத்தறுத்து சிதைத்துவிட்டனர். இந்த வாக்கு திருட்டு குறித்து முதல்வர் விஜய் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


