Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.52.50 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு

புழல், ஆக.1: புழல் அருகே புத்தகரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கோயிலுக்கு சொந்தமான ரூ.52.50 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 1.94 ஏக்கர் நிலம், புழல் அடுத்த புத்தகரம், சுபாஷ் நகர் கடப்பா சாலையில் உள்ளது. இந்த, நிலத்திற்கு உரிய வாடகை செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்து சமய அறநிலைத்துறை, கடந்த 2024ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்பேரில், சுமார் ரூ.52 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நிலம், சென்னை மண்டல இணை ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவின்பேரில், சென்னை மண்டல துணை ஆணையர் பாரதிராஜா மற்றும் கோயில் நிலங்கள் வட்டாட்சியர் சச்சேந்திரர் தலைமையில் மீட்கப்பட்டு, பெயர் பலகை அமைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோயிலுக்கு சொந்தமான நிலம், சோமநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் ஜெகநாதன் மற்றும் அறங்காவலர் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.