Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தாய், மகளுக்கு பாலியல் தொந்தரவு தவெகவில் சேர்ந்து மிரட்டல்

தூத்துக்குடி, ஜூன் 9: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் வேலாயுதபெருமாள். இவர், கடந்த ஆண்டு திருச்செந்தூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவரது மகள் படிப்புக்காக உதவி செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவர்களை வரவழைத்து இருவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், திருச்செந்தூர் தாலுகா போலீசில் வேலாயுதபெருமாள் மீது புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேலாயுதபெருமாள் சமீபத்தில் தவெகவில் இணைந்துள்ளார். மேலும் பாலியல் வழக்கில் இருந்து தன்னைக் காத்து கொள்ள வேலாயுதபெருமாள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து சர்வதேச உரிமைக் கழகத்தின் மாவட்ட தலைவர் அந்தோணி சவரிமுத்துவுடன் அப்பெண் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எனக்கும் எனது மகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்த வேலாயுத பெருமாள் மீது திருச்செந்தூர் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள போதே அவர் பாதிக்கப்பட்ட எங்கள் வீட்டிற்கு வந்து மிரட்டுகிறார். எனவே வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.