Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கூரியர் அலுவலகத்திற்கு வந்த பார்சலில் 1,500 போதை மாத்திரைகள்

தாம்பரம், ஆக.29: தாம்பரம் - முடிச்சூர் சாலையில் உள்ள கூரியர் அலுவலகத்திற்கு சந்தேகத்திற்கு இடமான ஒரு பார்சல் வந்தது. இதனை கண்ட கூரியர் அலுவலக ஊழியர்கள் தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் பார்சலை திறந்து பார்த்தபோது 1,500 போதை மாத்திரைகள் இருந்தது.

இதுதொடர்பாக போலீசார் அரவிந்த்(எ) வெள்ளை அரவிந்த்(23) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அரவிந்த் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, போலீசார் அரவிந்தை மீட்டு தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.