Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெரம்பூர் பணிமனையில் சிஐடியு சார்பில் தவெக அரசை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

பெரம்பூர், ஆக.26: சென்னை தலைமை செயலகத்தில் மின்சார பேருந்து சேவைகளை தமிழக முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். இதனை கண்டித்து பெரம்பூர் மத்திய பணிமனை சிஐடியு சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓட்டேரி கிருஷ்ண தாஸ் சாலை பகுதியில் உள்ள பெரம்பூர் போக்குவரத்து பணிமனையில் நேற்று காலை 4.45 மணி முதல் 5.10 மணி வரை ஊழியர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பூர் மத்திய பணிமனை தலைவர் மதி தலைமையில் இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து துறையை பாதுகாத்திட வேண்டும், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும்.

காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், டிஏ நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலை பேருந்தை இயக்க வந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு அதன் பிறகு தங்களது பணிகளை மேற்கொண்டனர்.