Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வழிப்பறி செய்யப்பட்ட 400 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னை, ஆக.28: திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் கொள்ளையர்களால் பொதுமக்களிடம் வழிப்பறி செய்யப்பட்ட 400 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் பொதுமக்களிடம் வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் கொடுத்த தகவலின்படி, செல்போன்களை மீட்பது தொடர்பாக, திருவல்லிக்கேணி காவல் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு மற்றும் சிறப்பு படை காவலர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ‘சிஇஐஆர்’ போர்டல் மூலும் மாயமான மற்றும் திருடு போன செல்போன்களின் ‘ஐஎம்இஐ’ எண்கள் மூலம் தொடர் விசாரணை மேற்கொண்ட போது, தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு 400 செல்போன்கள் மீட்கப்பட்டது. பின்னர் புகார் அளித்த நபர்களிடம் செல்போனின் ‘ஐஎம்இஐ’ எண் விபரங்களை சரிபார்த்து நேற்று சிந்தாத்திப்பேட்டை காவல் நிலையத்தில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.