Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது: குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை, ஜூன் 25: அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி சுமார் ரூ.23 லட்சம் பணத்தை ஏமாற்றியவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (65) என்பவரிடம் அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் (60), என்பவர் தனக்கு முன்னாள் அமைச்சருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். சீனிவாசன் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 2023 முதல் 2025 வரை பல்வேறு தவணைகளாக சுமார் ரூ.23 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமலும், பணத்தையும் திருப்பி தராமலும் ஏமாற்றிய இளஞ்செழியன் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து ரூ.23 லட்சம் பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று சீனிவாசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் பேரில் மத்தியகுற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து தலைமறைவாக இருந்த இளஞ்செழியன் (60) என்பவரை நேற்று ஈரோட்டில் வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து டிஇஓ, பி.இ.டி என்று குறிப்பிடப்பட்ட இரண்டு அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டது.