Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

எழும்பூர் சிபிசிஐடி வளாகத்தில் வரும் 2ம் தேதி கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம்

சென்னை, ஜூன் 25: எழும்பூரில் உள்ள சிபிசிஐடி வளாகத்தில் வருகிற 2ம் தேதி கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.இதுகுறித்து போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர், குற்றம் அலுவலகத்தில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் 02.07.2026 அன்று காலை 11 மணியளவில் எழும்பூர், சிபிசிஐடி வளாகத்தில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் வருகிற ஜூலை 2ம் தேதி காலை 10 மணிக்குள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத்தொகையை ரொக்கமாக செலுத்திவிட்டு இரண்டு நாட்களுக்குள் அதற்கு உண்டான ஜிஎஸ்டி தொகையை அவரவர் ஜிஎஸ்டி கணக்கில் செலுத்திவிட்டு அதன் நகலை இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனத்தின் விற்பனை ஆணை வழங்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் தவறாமல் அவர்களின் ஆதார் அட்டை நகலை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு தொலைபேசி எண்கள் 9952022860, 9962488150 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.