Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெண்ணிடம் அத்துமீறல் தேமுதிக பிரமுகர் கைது

பூந்தமல்லி, ஜூலை 24: ராமாபுரம் ஆண்டவர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (45). குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் தற்போது சிறையில் உள்ளார். இவரது மனைவி நித்யா (40). இவர்களது மகன் பாரத் (18). இந்நிலையில், 155வது வார்டு தேமுதிக வட்ட செயலாளரான ராமாபுரம் செந்தில் நகரை சேர்ந்த கார்த்திக் (34) என்பவர், நித்யாவை அடிக்கடி மொபைல் போனில் தொடர்பு கொண்டு, சுரேஷ் சிறையில் இருப்பதால் தன்னுடன் வந்து வாழுமாறு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதனை அறிந்த நித்தியாவின் மூத்த மகனான கல்லூரி மாணவரான பாரத், தனது தாயாருக்கு போன் செய்து தொல்லை கொடுக்கக் கூடாது என்று கார்த்திகை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், பாரத்தை வாட்ஸ் அப் அழைப்பில் தொடர்பு கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாரத் அளித்த புகாரின் பேரில், ராமாபுரம் போலீசார் கார்த்திக் மீது ஆபாசமாக பேசுதல், பெண்ணை அவமதித்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளிலும், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர்.