Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செல்போன் திருடிய சிறுவன் கைது

தண்டையார்பேட்டை, ஜூலை 24: ராயபுரம் பிவி கோயில் தெருவை சேர்ந்தவர் சரண்(26) இவரது வீட்டில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், வடமாநில தொழிலாளர்களான ரஜாக்(20), உமையோன்(20), ஷகில்(19), ராஜிப்(27), அஸ்கார் அலி(49) ஆகியோரின் செல்போன்கள் திருடுபோனது. இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர், சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினர். இவ்வழக்கில் தலைமறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.