Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புளியந்தோப்பில் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு

பெரம்பூர், ஜூன் 22: சென்னை புளியந்தோப்பு திருவிக நகர் 8வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (34). இவர் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்று விட்டு தனது வீட்டின் கீழே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். இரவு 12 மணியளவில் இவரது இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் புளியந்தோப்பு வஉசி நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்கின்ற வேர்க்கடலை (21) என்பவர் இருசக்கர வாகனத்தை குடிபோதையில் தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று விஜய்யை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.