Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை ரசித்த பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள்

சென்னை, ஜூலை 20: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐபிஎஸ் பயிற்சி முடித்த 20 பேர், நேற்று சுற்றுலா தலமான மாமல்லபுரம் வந்தனர். அங்கு கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர். பிறகு கடற்கரை கோயில், வெண்ணெய் உருண்டை பாறை முன்பு குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கடற்கரை கோயில் வளாகத்தின் முன் பகுதியில் மாமல்லபுரம் துறைமுக பட்டினமாக இருந்ததற்கு சான்றான படகு துறை, அகழி பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

கடல், உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கடற்கரை கோயில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், கோயிலை உருவாக்கிய மன்னர்களின் வரலாறுகள் குறித்து அவர்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி ஜானகிராமன் விளக்கி கூறினார். அப்போது, பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு வரலாற்று தகவல்களை ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டனர்.