பெரம்பூர், ஆக.18: நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (61). பெரம்பூர் சிம்சன் நிறுவனத்தில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். இவர், நேற்று பெரம்பூர் பி.பி.சாலையில் வசிக்கும் தனது தாய் லட்சுமியை பார்த்துவிட்டு, புளியந்தோப்பு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, 18 வயது மதிக்கத்தக்க 2 பேர், நாகராஜை மிரட்டி, அவரது செல்போன் மற்றும் ஒரு சவரன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து நாகராஜ் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement



