தாம்பரம், ஆக.18: தாம்பரம் மாநகர காவல் துறையினரால் போதை பொருள் தொடர்புடைய வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 33 இருசக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 38 வாகனங்களை வருகின்ற 28.8.2026ம் தேதி காலை 10 மணி முதல் தாம்பரம் மாநகர காவல், ஆயுதப்படை மைதானம், வேங்கடமங்கலத்தில் பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பொது ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 21.8.2026 தேதி காலை 10 மணி முதல் 26.8.2026 தேதி மாலை 5 மணி வரை நுழைவு கட்டணமாக ரூபாய் 1000த்தை காவல் உதவி ஆணையாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கூடுவாஞ்சேரி, தாம்பரம் மாநகரக் காவல் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு காவல் உதவி ஆணையாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கூடுவாஞ்சேரி, தாம்பரம் மாநகரக் காவல், அவர்களது அலுவலகத்தில் நேரடியாக தொடர்புகொள்ளலாம் என தாம்பரம் மாநகர காவல் ஆணையரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




