Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெயின்டர் திடீரென சுருண்டு விழுந்து சாவு

பெரம்பூர், ஆக. 17: வியாசர்பாடி இந்திரா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெயின்டர் பெருமாள் (25). இவருக்கு திருமணமாகி பிரியதர்ஷினி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பெருமாள் மனைவியை பிரிந்து, கடந்த ஒரு வருடமாக தாய் தனலட்சுமியுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பெயின்டிங் வேலை செய்வதற்காக வியாசர்பாடி சந்திரசேகர் தெருவுக்கு சென்றுள்ளார். மதியம் மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் பெருமாள் வேலைக்கு சென்றுள்ளார்.

மாலை 6 மணி அளவில் பெருமாள் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டதாக அவரது தாய் தனலட்சுமிக்கு தகவல் வந்துள்ளது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று தனது மகனை 108 ஆம்புலன்சை வரவழைத்து சோதனை செய்தபோது பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதுகுறித்து செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த பெருமாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.