Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 822 ரவுடிகள் அதிரடி கைது: பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2,648 பேரும் சிக்கினர்

சென்னை,ஜூலை 16: தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 822 ரவுடிகளை போலீசார் கைது ெசய்தனர். தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் ஈடுபடும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு மேற்பார்வையில் மாநிலம் முழுவதும், அனைத்து மாநகரங்கள், மாவட்டங்களில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 8ம் தேதி முதல் 14ம் ேததி வரையிலான 7 நாட்களில், பல்வேறு வழக்கில் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சரித்தரிப் பதிவேடு அல்லாத குற்றவாளிகள், தலைமறைவு குற்றவாளிகள் என தனித்தனியாக குற்றங்களுக்கு ஏற்றப்படி தரம் பிரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் மாநகரங்கள், மாவட்டங்களில் ரவுடிகள் உட்பட மொத்தம் 22,519 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 822 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வழக்குகளில் தலைமறைவாக இருந்த 2,648 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த அதிரடி சோதனை அடுத்தடுத்த நாட்களில் தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.