Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி : பல்கலை ஊழியர் உள்பட 5 பேர் கைது

சென்னை, ஜூலை 15: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, டெலிவரி ஊழியர் உள்பட 2 பேரிடம் ரூ.18 லட்சம் பெற்று ேமாசடி செய்ததாக பல்கலைக்கழக ஊழியர் உள்பட 5 பேரை போலீசார் கைது ெசய்தனர். சென்னை புதிய பெருங்களத்தூர் பாரதி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (38). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, கடந்த 2025ம் ஆண்டு எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வரும் கோபிநாத் என்பவர் அறிமுகமானார். அப்போது தினேஷ்குமார் தனக்கும், தனது சகோதரன் சரவணன் என்பவருக்கும் அரசு பணி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். உடனே கோபிநாத் தனது நண்பரான கிஷோர் என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார்.

பிறகு தினேஷ்குமாரை கிஷோர் அமர்பிரசாத் என்பவரிடம் அழைத்து சென்றார். அப்போது அமர்பிரசாத், அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக தினேஷ்குமார் மற்றும் அவரது சகோதரன் சரவணன் ஆகியோர் ரூ.18 லட்சத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் ைவத்து சசிகுமாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சொன்னப்படி 2 பேருக்கும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திரும்ப கேட்டும் அவர்கள் தர மறுத்துவிட்டனர். இதனால் தினேஷ்குமார் மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் நேற்று முன்தினம் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட எலக்ட்ரீஷியன் கோபிநாத், அவரது நண்பர் கிஷோர், அமர்பிரசாத் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் சசிகுமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.