Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூடுதல் அமர்வு நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர தலைமை குறறவியல் வழக்கறிஞர், சென்னை மாநகர அரசு பிளீடர் கூடுதல் அரசு பிளீடர்கள், கூடுதல் அமர்வு நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர்கள், போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், விரைவு நீதிமன்றங்கள், மகளிர் சிறப்பு நீதிமன்றம், அல்லிகுளத்தில் உள்ள கூடுதல் அரசு குற்றவியல் மற்றும் அரசு பிளீடர்கள், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர், வெடிகுண்டு மற்றும் பொடா வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர்கள், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர், மனித உரிமைகள் சட்டத்தின்கீழ் தொடரப்படும் வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் என 30 வழக்கறிஞர்களுக்கான நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குற்றவியல் வழக்கறிஞர்களுக்கான பதவிக்கான அனுபவம் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் இருக்க வேண்டும். சிறப்பு அரசு வழக்கறிஞர்களுக்கான அனுபவம் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் வரும் 29ம் தேதி மாலை 5.45 மணியாகும்.