ஆவடி, ஆக.10: ஆவடியில் வாலிபரை காரில் கடத்தி கொலை செய்த வழக்கில் மேலும் 4 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் அருகே, வெங்கல்-சீத்தஞ்சேரி காப்பு காட்டுக்கு செல்லும் வழியில், கடந்த 2 நாட்களுக்கு முன் ஆவடி, பொத்தூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற வாலிபரை, நட்ராஜ் (எ) நவமணி (30) என்ற ரவுடி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரி வெட்டி படுகொலை செய்து வெங்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, ரவுடி நட்ராஜ் (எ) நவமணி மற்றும் அவரது கூட்டாளிகளான ஆவடி, பொத்தூர் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் (20), ஆகாஷ் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசாரின் தொடர் விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆவடி பகுதியை சேர்ந்த ஐயப்பன் (35), பெரியபாளையம் அருகே தண்டலம் பகுதியை சேர்ந்த தனுஷ் (23), கபில் (21), அரவிந்த் (25) ஆகிய 4 பேரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



