மாதவரம், ஆக.10: மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்வேறு பேரணி நேற்று நடைபெற்றது. திருவள்ளுர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், கண்டன பேரணி மாதவரத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் காங்கைகுமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் லோகநாதன் மாரி, நாகராஜ், வெங்கடேசன், சந்திரசேகர், அருண்குமார், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணி மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி மாதவரம் தபால் பெட்டி வரை சென்றது. அப்போது கட்சி தொண்டர்கள் மக்களவை தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் எனக் கூறி, ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், கருப்பு பதாகை மற்றும் பலூன்ளை கைகளில் ஏந்தி நியாயமான முறையில் தொகுதி மறுவரையறையை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியில், நிர்வாகிகள் மாணிக்கவாசகம், பெரம்பூர் நிசார், விஜயன், அருணாச்சலம், ரமேஷ், பொன் ரவி, குபேந்திரன், அச்சுதன், பாபு, கணேசமூர்த்தி, ராமலு, ராஜீவ் காந்தி, நித்தியானந்தம், மணிகண்டன், ஜெயராஜ், சாந்தராமன், மதுசூதனராவ், விசுவநாதன், பொன்ராஜ், இமயவரம்பன், மூர்த்தி, சேதுபதி, எம்பெருமான், பயாஸ் அஹமத், புழல் நவாஸ், சந்தோஷ், பிரகாஷ், குமார், தேவேந்திரன், இலக்கியா, பரத், சாலோமன் நேதாஜி,உதயா கே.எஸ். பாஸ்கர் இளங்கோ, பாக்யராஜ், அன்பு, சாமுவேல், வேல்விழி, டில்லிபாபு, அன்புக்கரசன், சுகுமார், பாபு உமர், வெங்கடேசன் சாகுல், பசும்பொன் கணேசன், அப்துல் சமது உள்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



