Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழகம் முழுவதும் 61 டிஆர்ஓக்கள் மாற்றம்: தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு

சென்னை, ஜூலை 10: தமிழகம் முழுவதும் 61 டிஆர்ஓக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள உத்தரவு:

செய்தித்துறையில் சோஷியல் மீடியா இணை இயக்குநராக இருந்த சுரேந்திரன், கோவை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியாகவும், திருவள்ளூர் சிப்காட் நில எடுப்பு டிஆர்ஓவாக இருந்த கவிதா, சோஷியல் மீடியா இணை இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இளவரசன், சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய டிஆர்ஓவாகவும், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த முருகேசன், மருத்துவ சேவை பணியாளர் தேர்வு உறுப்பினராகவும், செங்கல்பட்டு நில எடுப்பு டிஆர்ஓவாக இருந்த தேவி, வணிக வரித்துறை துணை ஆணையராகவும், சென்னை கலால் துணை ஆணையராக இருந்த மணிகண்டன் டவுண் பஞ்சாயத்து இணை இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் 61 டிஆர்ஓக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.