Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்லாவரம் அருகே பரபரப்பு நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை சுத்தியலால் தாக்கிய கணவர் கைது

பல்லாவரம், ஜூலை 9: பல்லாவரம் அடுத்த பம்மல், கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (33). அதே பகுதியில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயந்தி (23) என்ற மனைவியும் ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மனோஜ்குமார், ஜெயந்தியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு செல்ல முடிவு செய்த மனோஜ்குமார், மனைவியையும் உடன் வருமாறு அழைத்தார்.

ஆனால் அவருடன் செல்ல ஜெயந்தி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ்குமார் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து மனைவி என்றும் பாராமல் ஜெயந்தியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த ஜெயந்தி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜெயந்தியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் மனோஜ்குமாரை கைது செய்தனர்.