Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளின் ஜாமீன் ரத்து தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவ

சென்னை, நவ.4: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.வி.விசுவநாதன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பி.சிங், ‘இந்த வழக்கில் கொலையில் ஈடுபட்ட பிரதான 10 குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக, அருள், பொன்னை பாலு, ராமு, திருமலை, மணிவண்ணன், சிவா, விஜய், கோகுல், சந்தோஷ் ஆகிய அனைவரும் நேரடியாக கொலையில் தொடர்புடையவர்கள். எனவே அவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஏதுவாக இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவர்கள் சிறையில் இருந்தாலும் வெளியே குற்ற செயலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய நபர்கள். அதனால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்,’ என்றார். அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் எந்தெந்த குற்றவாளிகளை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும், யாருக்கு ஜாமீனை ரத்து செய்ய வேண்டும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரம் என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை சிபிஐ தரப்பு தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்தகட்டமாக இந்த வழக்கை விசாரிக்கலாம் என தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.