சென்னை, நவ.4: தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் 868 போதை பொருள் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 7,781 கிலோ கஞ்சாவை, போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீ வைத்து அழித்தனர்.
தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் உத்தரவுப்படி மாநிலம் தழுவிய ‘ஒரு நாள் ஒருங்கிணைந்த போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் நேற்று சோதனை நடந்தது. இந்த சோதனையில் மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,760 கிலோ கஞ்சா மற்றும் 0.250 கிராம் மெத்தாம்பெட்டமின் ஆகியவை செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கழிவு சுத்திகரிப்பு மற்றும் அழிப்பு நிலையத்தில் தீவைத்து எரித்து அழிக்கப்பட்டன.
மேலும் நடப்பு 2026ம் ஆண்டில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு மொத்தம் தமிழகம் முழுவதும் 868 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 7,781 கிலோ கஞ்சா, 140 கிலோ பிற போதை பொருட்கள் மற்றும் 1,440 போதை மாத்திரைகள் அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


