Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தேசிய பேரிடர் மீட்பு படைக்குழு வருகை

சென்னை, நவ.3: முரசு புயலினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், வார்டு 04க்குட் பட்ட ராமநாதபுரம் 1வது தெருவில் உள்ள மாநகராட்சி சமூக நலக் கூடத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகை தந்துள்ள 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுவினருடன் கலந்துரையாடி, மீட்பு உபகரணங்களைப் மாநகராட்சி ஆணையர் சமீரன் பார்வையிட்டார். முரசுப் புயலினை முன்னிட்டு, காற்றும் மழையும் அதிக அளவில் இருக்கும் என்பதை எதிர்பார்த்து தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் முன்னெச்சரிக்கையாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருந்திடவும், தாழ்வானப் பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண மையங்களுக்கு சென்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கண்காணிப்புடன் தயார் நிலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிகழ்வின் போது, தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வாளர் குமார் மண்டல அலுவலர் சங்கர், செயற்பொறியாளர்கள் ஜெயராமன், பாண்டியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.