பெரம்பூர், நவ.3: பெரம்பூரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வைர வளையல்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிய நேபாள வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் கந்தன் தெருவைச் சேர்ந்தவர் கவுதம் (26). கடந்த 31ம் தேதி இரவு இவரது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.10,800 ரொக்கம், மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பிலான வைர வளையல்கள் மாயமானது. வீட்டில் வேலை செய்து வந்த நேபாளத்தை சேர்ந்த அக்ஷய் (19) என்பவரும் மாயானார்.
இதுகுறித்து செம்பியம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கவுதம் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரபிக் உசேன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், செல்போன் டவர் மூலம் அண்ணாநகரில் பதுங்கி இருந்த அக்ஷயை கைது செய்து விசாரித்தனர். அதில், வைர வளையல் மற்றும் பணத்தை அக்ஷய் திருடியது உறுதியானது. இதையடுத்து, போலீசார் அக்ஷயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


