Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தலைமை செயலக நுழைவாயில் அருகே தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

சென்னை, ஜூன் 3: தலைமை செயலகம் நுழைவாயில் அருகே தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசன் என்பவர், சென்னை தலைமை செயலக நுழைவாயில் அருகே தீக்குளிக்க முயன்றார். இதனை தடுத்த பாதுகாப்பு காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வீடு கட்டுவதற்காக லோன் வாங்கித் தருவதாக கூறி, தன்னிடம் 7 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எழிலரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மனு கொடுக்க வந்தால் காவல் துறையினர் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர், என்ற வேதனையில் தீக்குளிக்க முயன்றதாக கூறினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி விசாரித்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.