Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கட்சி அலுவலகம் கட்டுவதற்காக கடலோர பாதுகாப்பு படையின் இடத்தை ஆக்கிரமித்த தவெகவினர்

திருவொற்றியூர், ஜூன் 3: கட்சி அலுவலகம் கட்டுவதற்காக, திருவொற்றியூர் கடற்கரையை தவெகவினர் ஆக்கிரமித்ததுடன், இதை தட்டிக்கேட்டவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் ஒண்டி குப்பம் கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான இடத்தில், தவெக கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சி அலுவலகம் கட்டுவதற்காக, தகர கொட்டகை அமைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மற்றும் அதிமுகவினர் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அங்கு வந்த ஊழியர்கள், கடற்கரையில் அனுமதி இல்லாமல் தகரக் கொட்டகை அமைக்க கூடாது என கூறி கொட்டகை கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், ஒண்டிகுப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் ரவீந்திரன் (45) என்பவர் நேற்று முன்தினம் நடந்த மீனவ கிராம பஞ்சாயத்தின் மாதந்திர கூட்டத்தில் பங்கேற்று, வீட்டுக்கு கிளம்பியபோது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த தவெக ஆதரவாளர்கள் ஜெய்சங்கர், ஜனரத்தினம் ஆகியோர், ரவீந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சரமாரியாக தாக்கினர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இந்த மோதலில் ரவீந்திரன் மற்றும் அவரது தங்கையும், தவெக நிர்வாகி ஜெய்சங்கர் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிர்மைத்து தவெக கட்சி அலுவலகம் கட்ட முயன்ற விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.