Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் நடைபெறும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 52% பணிகள் நிறைவு

சென்னை, ஜூன் 2: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் ஒட்​டுமொத்​த​மாக 52.55 சதவீத மெட்ரோ பாதை அமைக்​கும் பணி​கள் நிறைவடைந்​துள்​ள​தாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரிவித்​துள்​ளனர். சென்னையில் முதற்கட்ட மெட்ேரா ரயில் திட்டத்தில், விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதாவது, மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்​தடத்​தி​லும், கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்​தடத்​தி​லும், மாதவரம் - சோழிங்கநல்​லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்​தடத்​தி​லும் பணி​கள் நடை​பெறுகின்​றன. இந்த 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மொத்​தம் 118 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்க திட்​ட​மிட்​டு, பணி​கள் நடைபெறுகின்​றன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்​கப்​பாதை​யில் 43 சுரங்க ரயில் நிலையங்​கள் அமைக்​கப்​பட​ உள்​ளன.

இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்​கப் பாதை​யில் 43 சுரங்க ரயில் நிலை​யங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன. மெட்ரோ ரயில் கட்​டு​மானப் பணி கடந்த 2020ம் ஆண்டு நவம்​பரில் தொடங்​கியது. சுரங்​கப் பாதை பணியை பொருத்​தவரை, மாதவரத்​தில் கடந்த 2022ம் ஆண்டு அக்​டோபரில் தொடங்​கியது. இதைத் தொடர்ந்​து, பசுமை வழிச்​சாலை, கலங்​கரை விளக்​கம், சேத்​துப்​பட்​டு, பனகல் பூங்கா உட்பட பல்​வேறு இடங்​களில் சுரங்​கப் பாதை பணி​கள் தொடங்​கின. பசுமைவழிச் சாலை அடை​யாறு, சேத்​துப்​பட்டு ஸ்டெர்​லிங் சாலை, அயனாவரம் பெரம்​பூர், பனகல் பூங்கா கோடம்​பாக்​கம் சுரங்​கப் பாதை பணி​கள் அடுத்​தடுத்து நிறைவடைந்​தன.கலங்​கரை விளக்​கம், மயி​லாப்​பூர், ராயப்​பேட்டை ஆர்​.கே.​சாலை, பசுமைவழிச் சாலை, மந்​தைவெளி ஆகிய சுரங்​கப்​பாதை பணி​களும் நிறைவடைந்​துள்​ளன. இதுத​விர, பல்​வேறு இடங்​களில் சுரங்​கப் பாதை பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன. இதே​போல், உயர்​மட்​டப் பாதை பணி பொருத்​தவரை 4வது வழித்​தடத்​தில் பூந்​தமல்லி, போரூர், வடபழனி தடத்​தில் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. அதே நேரத்​தில், போரூர் - வடபழனி இடையே மெட்ரோ ரயில் நிலைய கட்​டு​மானப் பணி​கள் நடை​பெறுகின்​றன.

வடபழனி, கோடம்​பாக்​கம், பவர்​ஹவுஸ் பாதை​யில் தற்​போது தண்​ட​வாளம் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. பல இடங்​களி​லும் உயர்​மட்​டப் பாதை பணி​களும் மும்​முர​மாக நடை​பெறுகின்​றன.

இந்​நிலை​யில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் ஒட்​டுமொத்​த​மாக, 52.55 சதவீதம் பணி​கள் நிறைவடைந்​துள்​ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது:

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் முதல் மெட்ரோ ரயில் சேவை, 4வது வழித்​தடத்​தில் பூந்​தமல்லி, போரூர், வடபழனி தடத்​தில் விரை​வில் தொடங்​கும் என எதிர்​பார்க்​கிறோம். இதையடுத்​து, சென்னை வர்த்தக மையம், போரூர் பணி​களை முடிக்க உள்​ளோம். போரூர், கோயம்​பேடு ஆகிய உயர்​மட்​டப்​பாதை பணி​களும் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் உயர்​மட்ட பாதை, சுரங்​கப் பாதை சேர்த்து நடப்​பாண்​டில் ஏப்​ரல் மாதம் வரை ஒட்டுமொத்​த​மாக 52.55 சதவீத பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. சட்​டப்​பேரவை தேர்​தல் காரண​மாக, மேற்​கு​வங்​கம், அஸ்​ஸாம் உள்​ளிட்ட வட மாநில தொழிலா​ளர்​கள் 2 மாதங்​களாக சொந்த ஊருக்கு சென்று இருந்​தனர். தற்​போது, பெரும்​பாலான தொழிலா​ளர்​கள் திரும்பி வந்​துள்​ளனர். மீண்​டும் பணி​கள் தீவிரமடைந்​துள்​ளன. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், வரும் 2027ல் அனைத்து உயர்​மட்​டப்​பாதை பணிகளும்​, 2028ம்​ ஆண்​டுக்​குள்​ அனைத்​து சுரங்​கப்​பாதை பணிகளும்​ முடிக்​க இலக்​கு நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்கள் கூறினர்.