Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீடு, நகை, பணத்தை அபகரிக்க தாயை சித்ரவதை செய்த மகள்

பெரம்பூர், ஜூலை 1: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 94வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (62). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த 7 ஆண்டுகளாக மேற்கண்ட பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது தங்கை சரோஜா என்பவர் இறந்து விட்டதால் அவரது மகன் அருண் (29) என்பவரை குழந்தையிலிருந்து அஞ்சம்மாள் வளர்த்து வருகிறார். அஞ்சம்மாளுக்கு தீபா (40) என்ற மகள் உள்ளார். இவர் அதே வீட்டின் கிழ் தளத்தில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தீபா தனது தாய் பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டு வந்துள்ளார். மேலும், தீபா தனது தாய் பெயரில் எல்ஐசி பாலிசி எடுத்து வைத்துள்ளார்.

மேலும், தனது தாய் பெயரில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். அஞ்சம்மாள் கட்டி வந்த எல்ஐசி பாலிசிசெலுத்தி வந்துள்ளார். இதையறிந்த தீபா தனது தாயிடம் அந்த பணத்தை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அஞ்சம்மாள் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகள் தீபா தனது நகைகள் மற்றும் இன்சூரன்ஸ் பணம் மற்றும் வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில், தீபாவை கைது செய்தனர்.