Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அடையாறில் நள்ளிரவு பைக் ரேசில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது

சென்னை, ஜூலை 1: சென்னையில் அடையாறு, பெசன்ட் நகர் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். ஆபத்தான வகையில் வீலிங் செய்தனர். மேலும், சாலையில் இருந்த பேரிகார்டை இழுத்து சென்றனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, வாகன பதிவு எண்களை வைத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பல்லாவரம் பகுதியை சேர்ந்த 17 வயதுள்ள பிளஸ் 2 மாணவன், கல்லூரி மாணவர்கள் 3 பேர் மற்றும் குன்றத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவா (19) ஆகிய 5 பேரை நேற்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.