அறந்தாங்கியில் ரத்ததான முகாம்
Advertisement
அறந்தாங்கி, அக். 11: அறந்தாங்கியில் தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சைக்கிளிங் சங்கம் இணைந்து ரத்ததான முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.ரோட்டரி சங்கத் தலைவர் அப்துல் பாரி தலைமை வகித்தார். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், மருத்துவர்கள் விஜய், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமில் 55 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. பழனிவேல் வரவேற்றார். செயலாளர் ஆண்டோ பிரவின் நன்றி கூறினார்.
Advertisement