திருப்போரூர்: எஸ்.ஆர்.எம். வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் திருப்போரூரை அடுத்துள்ள கிராமங்களில் தங்கி விவசாய பணிகள் குறித்து ஆய்வு செய்தும் பயிற்சி பெற்றும் வருகின்றனர். இதன், ஒரு பகுதியாக `மண் வளம் காப்போம்’ என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. திருப்போரூர் வாணி வித்யாலயா பள்ளி தாளாளர் மலர்விழி நடேசன், தலைமை ஆசிரியை பிரியா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேரணியில் வேளாண்மையின் முக்கியத்துவம், மண் வளத்தை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ - மாணவிகள் திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து தண்டலம் ஊராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
Advertisement


