தாராபுரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தாராபுரம், மார்ச் 21: மாவட்ட பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம், சிஐடியு சார்பில் தாராபுரம் அண்ணா சிலை அருகே தொழிலாளர் நல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய, மாநில அரசுகளுக்கான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியு மேகவர்ணன் தலைமை வகித்தார். இதில் ஜவுளிக் கொள்கை 2024 தொழிலாளர்கள் நலன் காக்க திட்டமிடு, இஎஸ்ஐ அடையாள அட்டை பிஎப்யுஏ எண் விபரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Advertisement
Advertisement