திருப்பூர், ஜூலை 14: பீகாரை சேர்ந்தவர் சதன்குமார் யாதவ் (18). இவர் அக்ரஹாரபுத்தூரில் உள்ள மில்லில் தங்கி வடமாநில தொழிலாளர்களுக்கு பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ரஞ்சித் பிஸ்வால் என்பவர் சதன்குமார் யாதவிற்கு முன்பு பொறுப்பாளராக இருந்த போது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை மாற்றம் செய்தனர். இதனால் சதன்குமார் யாதவுக்கும், ரஞ்சித் பிஸ்வால்க்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சதன்குமார் யாதவ் தனது குடியிருப்பு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது ரஞ்சித் பிஸ்வால் மற்றும் அவருடைய நண்பர்களான பிரதீப் நாயக் , குட்டு ஆகியோர் சேர்ந்து சதன்குமார் யாதவை காரில் கடத்த முயன்றனர். தொடர்ந்து சதன்குமார் யாதவ் கூச்சலிட்டத்தால் அங்கேயே விட்டுவிட்டு 3 பேரும் தப்பியோடினர். தப்பி ஓடிய போது பிரதீப் நாயக்கிற்கு காலில் அடிபட்டதால் அவரை சிகிச்சைக்காக திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.