தா.பழூர், அக்.30: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினர் வி.கைகாட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது டிப்பர் லாரியில் கிராவல் மண் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி விகைகாட்டி அருகே உள்ள சந்திரபாளையம் பகுதிக்கு போலீசார் சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் டிப்பர் லாரியை ஓட்டி வந்தவர் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்பு டிப்பர் லாரியை பரிசோதனை செய்தபோது அதில் முனியங்குறிச்சி பகுதிகளிலிருந்து அரியலூர் பகுதிகளுக்கு கிராவல் மண் கடத்தியது தெரிய வந்தது. பின்பு டிப்பர் லாரியை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.


