Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அனைத்து ஓய்வூதியர் சங்கம் போராட்டம்

அரியலூர்,அக்.30: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தோர் ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டாலும் ஓய்வூதிய பயன்கள் பெறுவதில் இடர்பாடுகளை கலைத்திட வேண்டும் சம விலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் நிலை பொறியாளர்களுக்கு உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 70 வயது ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜாகோபால் தலைமை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்டத் துணைத் தலைவர் மணிமொழி வரையறு உரையாற்றினார் மாவட்ட தணிக்கையாளர் சேகர் நன்றி உரையாற்றினார். நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.