Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூர் சாலைபோக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி

அரியலூர், ஜன. 30: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 37வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நேற்று அரியலூர் போக்குவரத்து காவல்துறையினரின் சார்பில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். இதில் பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து தங்களது படைப்புகளின் மூலம் விளக்கமளித்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவர்களின் படைப்பாற்றலை வெகுவாக பாராட்டி,

இந்த மாணவர்களின் விழிப்புணர்வு கண்காட்சியின் மூலம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுரை வழங்கினார்.இந்நிகழ்வின் போது, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.