அரியலூர், அக். 29: அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேசியபோது: எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல். நிலக்கரி, நீர், மின்சாரம் நமது ஆற்றல் வளமாகும்.
மாணவர்களும் பொதுமக்களும் பகல் நேரங்களில் சூரிய வெளிச்சத்தை அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாத நேரங்களில் மின்விசிறிகள், மின் விளக்குகளை எரிய விடக்கூடாது. ஆற்றல் சேமிப்பு, ஆற்றல் உற்பத்திக்குசமம். பள்ளி மாணவர்கள் புதுப்பிக்கக்கூடிய புதிய ஆற்றல் வளங்களை கண்டுபிடித்து நமது நாட்டின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக ஆற்றல் மன்ற பொறுப்பு ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி தனலட்சுமி வெங்கடேசன் அந்தோணி டேவிட் அபிராமி ஆய்வக உதவியாளர் மணிகண்டன் மற்றும் மாணவ மாணவிகள் ஆற்றல் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.


