அரியலூர், அக். 29: அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். இதில் டிஏபிஎஸ் திட்டத்தின் விதிமுறைகளை உடனடியாக வெளியிடவேண்டும்.
31.12.2025 முன்னர் ஓய்வு பெற்றோருக்கு திட்டத்தின் பலன்களை வழங்கவேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள் நியமனத்தை கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யவேண்டும்.
சமூக நலத்துறையின் களப்பணியாளர்கள், பொது சுகதாரத்துறையின் சுகாதார ஆய்வாளர்கள், அனைத்து மருந்தாளுநர்கள், மருத்துவத்துறையின் நிர்வாக ஊழியர்கள், ஆய்வக நுட்பநர்கள், எக்ஸ்ரே பணியாளர்கள் ஆகியோரது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் செயலர் ஷேக்தாவூத் மற்றும் மேற்கண்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


