Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாடாலூரில் நள்ளிரவில் 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

பாடாலூர், ஆக. 29: ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், டீக்கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரைச் சேர்ந்த கந்தசாமியின் மகன் கனகராஜ் (53), கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார்.

மறுநாள் காலை கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியில் செயல்பட்டு வரும் மருதமுத்துவின் மகன் மணிவேல் (65) நடத்தி வரும் நியூமராலஜி சென்டர் மற்றும் பூமிநாதனின் மகன் ஈஸ்வரன் (65) நடத்தி வரும் செல்லியம்மன் மளிகைக் கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இருப்பினும், அந்த இரு கடைகளிலும் இருந்து பணம், பொருள் எதுவும் திருடு போகவில்லை.

தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், பெரம்பலூர் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் கைரேகை பிரிவு இன்ஸ்பெக்டர் ஷீலா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். விசாரணையில் ஒரு கடையில் மட்டும் ரூ.50 ஆயிரம் திருடியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பாடாலூர் காவல் நிலைய உள்ள பகுதியில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.