Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் இன்று இ-கேஒய்சி சிறப்பு முகாம் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு அழைப்பு

அரியலூர், ஆக.29: அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள்அனைவரும் e-KYC கீழ் கைரேகை புதுப்பிப்பதை கட்டாயமாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணி நமது மாவட்டத்தில் 95.79 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கைரேகையை வைத்து புதுப்பிக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை 31,187 ஆக உள்ளது.

எனவே e-KYC மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளும் e-KYC மேற்கொள்ள ஏதுவாக இன்று (ஆகஸ்ட் 29) சனிக்கிழமை அனைத்து நியாயவிலை கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, e-KYC மேற்கொள்ளாத அனைத்து குடும்ப உறுப்பினர்களும் மேற்கண்ட நாளில் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலை கடைக்கு குடும்ப அட்டையுடன் சென்று ரேகை வைத்து e-KYC புதுப்பித்துக்கொள்ளுமாறும், மேலும், கைரேகை பதிவு செய்யாமல் பணிநிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக்கடைக்கு சென்று தங்கள் கைரேகையை வைத்து e-KYC புதுப்பித்துக்கொள்ளுமாறும் குடும்ப அட்டைதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.