Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்

ஜெயங்கொண்டம், ஆக.29: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் சித்திரை பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் சித்திரை பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. கடந்த 2015 நவம்பர் 25ம்தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. திருப்பனந்தாள் காசிமடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கிரிவலத்தை துவக்கி வைத்தார்.

நேற்று மாலை 3மணிக்கு கணக்கவிநாயகருக்கு அபிஷேகம், 4.30மணிக்கு பிரகதீஸ்வரருக்கு சந்தனம், பால், திரவியப்பொடி, மாவுப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5.30மணிக்கு சிவனடியார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது.

அதன்பின் பிரகதீஸ்வரர் முன்னின்று தீபஒளி ஏற்றி கோயில் சுற்றி உள்ள கிராமங்களான குறுக்கள்தெரு கணக்கவிநாயகர் கோயில் வழியாக மீண்டும் கோயில் வந்து பின்னர் பிரகாரம் வலம் வந்து அங்கு சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடைபெற்றது. பௌர்ணமி கிரிவலத்தில் சிவனடியார்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாமன்னன் இராஜேந்திரசோழன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.